முகப்பு /செய்தி /விளையாட்டு / 2 ஆவது டெஸ்டிலும் இலங்கை அணி தோல்வி… தொடரை வென்றது நியூசிலாந்து

2 ஆவது டெஸ்டிலும் இலங்கை அணி தோல்வி… தொடரை வென்றது நியூசிலாந்து

கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி.

கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி.

2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

பரபரப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் த்ரில்லிங்கான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து 2 ஆது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளியன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 123 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 215 ரன்களையும், ஹென்றி நிகோல்ஸ் 200 ரன்களையும் விளாசினர்.

top videos

    இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியபோது, நியூசிலாந்து பவுலர்கள் மளமளவென விக்கெட்டுகளை எடுக்கத் தொடகினர் 66.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பிரேஸ்வெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 142 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பல் டிம் சவுத்தி மற்றும் ப்ளேர்டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.

    First published:

    Tags: Cricket