முகப்பு /செய்தி /விளையாட்டு / பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி…

பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி…

வெற்றியை கொண்டாடும் நியூசிலாந்து அணி.

வெற்றியை கொண்டாடும் நியூசிலாந்து அணி.

300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஏற்கனவே பாகிஸ்தான் அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. கராச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் டாம் ப்ளண்டெல் ஆகியோர் களத்தில் இறங்கினர். டாம் 15 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 23 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் கேப்டன் டாம் லாதமுடன் இணைந்து வில் யங் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 58 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து டாம் லாதம் வெளியேற அடுத்து வந்த சாப்மன் 33 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் ஓபனிங் பேட்ஸ்மேன் வில்யங் சிறப்பாக விளையாடி 91 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிதி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

top videos

    இதையடுத்து 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். தொடக்க வீரர் பகர் சமான் 64 பந்துகளில் 33 ரன்களும், ஷான் மசூத் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம் 1 ரன்னும், ரிஸ்வான் 9 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இணைந்த அகா சல்மான் மற்றும் இப்திகார் அகமது இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. சல்மான் 57 ரன்கள் எடுக்க இப்திகார் 72 பந்துகளில் அதிரடியாக 94 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார். 46.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லே மற்றும் ரச்சன் ரவிந்திரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    First published:

    Tags: Cricket