முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…

மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…

மெக் லேனிங் - ஹேலி மேத்யூஸ்

மெக் லேனிங் - ஹேலி மேத்யூஸ்

இங்கிலாந்து அணியை சேர்ந்த நேட் சீவர் ப்ரென்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இறுதிப் போட்டியில் இவர் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச் சென்றார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்களில் மேத்யூஸ் அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்ப்பிள் வண்ண தொப்பியையும், அதிக ரன் எடுத்ததற்காக மெக் லேனிங் ஆரஞ்ச் வண்ண தொப்பியையும் பெற்றுள்ளார்கள். அதிரடி பேட்டிங் மற்றும் அற்புதமான கேப்டன்ஷிப்பால் மெக் லேனிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கும் லேனிங் இந்த தொடர் முழுவதும் 345 ரன்களை குவித்திருக்கிறார். சராசரி 49.29 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 139.11 ஆகவும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் பேட்டிங்கில் ஜொலிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அவர் ஒட்டுமொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தொடர் நாயகி விருது இவருக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது.

top videos

    இதேபோன்று இங்கிலாந்து அணியை சேர்ந்த நேட் சீவர் ப்ரென்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இறுதிப் போட்டியில் இவர் 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை தட்டிச் சென்றார். இதேபோன்று அமேலியா கெர், சைகா இஷாக், இஸி வாங் உள்ளிட்ட வீராங்கனைகளும் சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை கவர்ந்தனர். பல திறமை மிக்க வீராங்கனைகளுக்கு நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் புகழை தேடித் தந்துள்ளது. விளையாட்டுத் துறையில் மகளிரை மேம்படுத்துதல் என்ற அடிப்படையில் முதல் மகளிர் ஐபிஎல் தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது.

    First published:

    Tags: Cricket