முகப்பு /செய்தி /விளையாட்டு / பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்… அப்டேட் வெளியிட்ட பிசிசிஐ

பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் உடல்நிலையில் முன்னேற்றம்… அப்டேட் வெளியிட்ட பிசிசிஐ

ஷ்ரேயாஸ் - பும்ரா

ஷ்ரேயாஸ் - பும்ரா

முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்கும் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த அப்டேட்டை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கடந்த 8 மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர், ஐபிஎல் உள்ளிட்டவற்றை பும்ரா தவிர்த்துள்ளார். அவரது உடல்நிலை குறித்து பிசிசிஐ தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

நியூசிலாந்தில் பும்ராவுக்கு கீழ் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு வலி முற்றிலுமாக குறைந்துள்ளது. இதையடுத்து 6 வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார். தற்போது அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருக்கிறார். அவரது உடல்நிலை முன்னேற்றங்களை கவனித்து வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயர் குறித்தும் பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது.

top videos

    ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த வாரம் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதன்பின்னர் 2 வாரங்களுக்கு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் அவர் இருப்பார். இதன்பின்னர் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு கொண்டு வரப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023