முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘100 சதங்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல…‘ – விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி கமென்ட்

‘100 சதங்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல…‘ – விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி கமென்ட்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி ஃபிட்டாக இருக்கிறார். அவரால் இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்கள் அடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். சச்சின் எடுத்துள்ள சர்வதேச 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்பது குறித்த கேள்விக்கு ரவி சாஸ்திரி இவ்வாறு பதில் அளித்துள்ளார். 1205 நாட்களுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது ஆட்டத்தில் சதம் அடித்தார். தற்போது அவர் சர்வதேச போட்டிகளில் 75 சதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி ஒருவரால் மட்டுமே தற்போது முறியடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. விராட் கோலி இப்போது 34 வயது ஆகிறது. இன்னும் அவர் 4 ஆண்டுகளூக்கு விளையாடினால் மட்டுமே சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

top videos

    இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலி 100 சதங்கள் அடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்த சாதனையை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதி மிகப்பெரிய பணி. விராட் கோலி ஃபிட்டாக இருக்கிறார். அவரால் இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும். இதற்கு அவர் தொடர்ந்து ஃபார்மில் இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. எனவேதான் ஒரே ஒருவராக சச்சின் அந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Cricket