முகப்பு /செய்தி /விளையாட்டு / ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது பாதிப்பா..? மனம் திறந்த ஹர்திக் பாண்டியா..

ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது பாதிப்பா..? மனம் திறந்த ஹர்திக் பாண்டியா..

ஸ்ரேயஸ் ஐயர் - ஹர்திக் பாண்டியா

ஸ்ரேயஸ் ஐயர் - ஹர்திக் பாண்டியா

அவர் இல்லாதது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அவர் மீண்டு வர சில நாட்கள் தேவைப்பட்டால், நிச்சயம் அதற்கு மாற்றை நாம் சிந்திக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள  ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

இந்தப்போட்டியில்  கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. ரோஹித் களமிறங்காததால் ஹர்திக் பாண்ட்யா இப்போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார்.ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர். அணியில் காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து ஹர்திக் பாண்டிய தெரிவிக்கும்போது, ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது நிச்சயம் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மும்பையில் இன்று பலப்பரிட்சை..!

மேலும் அவர், “நானும் அந்த நிலையில் இருந்திருக்கிறேன். நிச்சயம் அவர் விரைவில் மீண்டு வருவார் என நம்பிக்கையாக உள்ளேன். அவர் இல்லாதது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை அவர் மீண்டு வர சில நாட்கள் தேவைப்பட்டால், நிச்சயம் அதற்கு மாற்றை நாம் சிந்திக்க வேண்டி இருக்கும். அவர் அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் மீண்டு வர சில நாட்கள் எடுக்கும்பட்சத்தில், அதற்கான மாற்றை நாம் சிந்திக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்தார்.

First published:

Tags: Hardik Pandya, Ind Vs Aus, India vs Australia, Shreyas Iyer