கிரிக்கெட் விளையாட்டில் பெரிய அளவில் சோபிக்காத ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வந்து, தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்தான் சென்னை ரசிகர்களால் ‘தல’ என அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.
2007ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து, ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது இந்திய கிரிக்கெட் அணி.
அப்போது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஓவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து மூத்த வீரர்கள் சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் விலகிவிட, கேப்டன் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டெடுத்த முத்துதான் தோனி.
அன்று தொடங்கிய வெற்றிப் பயணம், அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டி வடிவிலும் தொடருகிறது. ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர், ஒரு ஸ்டெம்பிங் அப்பறம் ஒரு ரிவியூ இது போதும் எனக்கு என அனைவரையும் வசியம் செய்து வைத்துள்ள தோனி நிஜ உலகின் பாட்ஷாவாக வலம் வருகிறார்.
இதையும் படிக்க : மோதலின்போது விராட் கோலியிடம் காம்பீர் சொன்னது என்ன? புதிய தகவலால் பரபரப்பு
அவரது மின்னல் வேக ஸ்டெம்பிங் மைதானம் முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது. கடைசி ஓவர் சிக்ஸ் மைதானத்திற்குள் இடி முழங்க வைக்கிறது. சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்தால் என்ன? தோனி அடித்த அந்த கடைசி ஓவர் சிக்ஸருக்கு என்றும் அடிமை என்று ரசிகர்கள் சொக்கிக்கிடக்கின்றனர்.
இதுவரை ஐபில் போட்டிகளில் மட்டும் 41 ஸ்டெம்ப்பிங் மற்றும் 57 கடைசி ஓவர் சிக்ஸர்களை விளாசி அனைவரையும் வசப்படுத்தியுள்ளார். கடைசி ஓவரில் அதிக சிக்ஸ் அடித்த சாதனை வீரராகவும் இன்றும் ஜொலிக்கிறார்.
கிரிக்கெட் உலகில் இத்தனை ஆண்டுகாலம் முடியசூடிய அரசனாக, ஆட்சி செய்த தோனியின் சாம்ராஜ்யம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த சோக காட்சி நடப்பாண்டு அரங்கேறாமல் தாமதப்பட வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் ஒருமித்த குரல்.
தோனி என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். பல திடீர் முடிவுகளுக்கு சொந்தக்காரரான தோனி, ஒருவேளை நடப்பாண்டு விடைபெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் கடைசியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று கூடும் கூட்டம் தான் மைதானத்திற்கு வண்ணம் தீட்டும் மஞ்சள் படை.
தனக்கு ஃபேர்வல் குடுப்பதாக நினைத்து, அனைவரும் அவர்களுக்கு பிடித்தமான அணியை விட்டுவிட்டு எனக்கு ஆதரவளிக்கின்றனர் என்று மஞ்சள் படையை பார்த்து கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் தோனி உதிர்த்த வார்த்தைகள் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
மைதானத்திற்குள் தோனியை எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க, களத்திற்கு உள்ளே தோனியிடம் எப்படியாவது பேசிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு இளம் வீரர்கள் அவரையே சுற்றி சுற்றி வருகின்றனர். போட்டி முடிந்ததும் தோனி வாத்தியாராகவும், இளம் வீரர்கள் ஸ்டூடண்டாக மாறுவது ஒவ்வொரு போட்டியிலும் அரங்கேறுகிறது.
ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் தோனி ஹீரோவாக தெரிந்தால், களத்தில் செயல்படும் நடுவர்களுக்கு தோனி வில்லனாகவே காட்சியளிக்கிறார். Decision Review சிஸ்டத்தை Dhoni Review System என பெயரையே மாற்றிவைத்துள்ளார். தோனி ரிவியூ கேட்டாலே அம்பயர்கள் சாரி கேட்க தயாராகிவிடுகின்றனர்.
சென்னையில்தான் எனது கடைசி போட்டி என நமக்கெல்லாம் உத்தரவாதம் அளித்துள்ள தோனி, உண்மையிலேயே இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டாரா அதற்கான சமிக்கை ஏதாவது தெரிகிறதா என தோனியின் வாத்தியாரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபிளமிங்கிடம் கேட்டபோது No Indication என்ற பதில் அனைவரையும் பெருமூச்சுவிட வைத்துள்ளது. தோனி இறுதி அத்தியாயத்தை நெருங்கவில்லை என்றே உணரவைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Chennai, CSK, Indian cricket team, MS Dhoni