முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விவகாரம் - அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணை?

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விவகாரம் - அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணை?

ஐபிஎல் டிக்கெட் வழக்கு

ஐபிஎல் டிக்கெட் வழக்கு

IPL 2023 | இந்த வழக்கில், பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் ஏழு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான டிக்கெட் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மதுரவாயலைச் சேர்ந்த அசோக் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

top videos

    அதில் பல டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில், பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கானது அடுத்தவாரம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023