முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘போடா டேய்’... ஹர்திக் பாண்டியாவை கலாய்த்த ரவீந்திர ஜடேஜா.. வெளிவந்த ஐபிஎல் ப்ரோமோ...

‘போடா டேய்’... ஹர்திக் பாண்டியாவை கலாய்த்த ரவீந்திர ஜடேஜா.. வெளிவந்த ஐபிஎல் ப்ரோமோ...

ஐபிஎல் ப்ரோமோ

ஐபிஎல் ப்ரோமோ

ப்ரோமோவில் நாங்கள் கெத்து என ஹர்திக் பாண்டியா சொல்ல, சென்னை ரசிகர்களுக்கு பின்னால் தோனியின் படம் மாஸாக வந்து நிற்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஐபிஎல் திருவிழா கடந்த 2008 முதல் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்த ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். இம்முறை 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், கடந்த முறை ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது. சென்னை மற்றும் மும்பை இரு அணிகளுமே ஒரு சேர ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது கடந்த ஆண்டே முதல் முறையாக இருந்தது.

முதல் போட்டி வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், முதல் போட்டிக்கான ப்ரோமோவை ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், குஜராத் அணியின் கேப்டன் தாங்கள் முதல் முறையே கோப்பையை வென்றோம் என கூறுவதும், ஜடேஜா பதிலுக்கு ‘நாங்கள் நான்கு முறை கோப்பையை வென்றோம்’என கூறுவதும், நாங்கள் கெத்து என ஹர்திக் பாண்டியா சொல்ல, சென்னை ரசிகர்களுக்கு பின்னால் தோனியின் படம் வந்து நிற்கிறது. உடனே குஜராத்தி மொழியில் ஹர்திக் பாண்டியா சொல்ல, ‘போடா டேய்’ என ஜடேஜா சொல்வதாக முடிகிறது.

ஐபிஎல் இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்களை இந்த ப்ரோமோ மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

First published:

Tags: CSK, Gujarat Titans, IPL, IPL 2023, MS Dhoni