முகப்பு /செய்தி /விளையாட்டு / ஏ+ பட்டியலுக்கு முன்னேறிய ஜடேஜா: பின்தங்கிய கே.எல்.ராகுல்- இந்திய அணி வீரர்கள் இடங்கள் என்னென்ன

ஏ+ பட்டியலுக்கு முன்னேறிய ஜடேஜா: பின்தங்கிய கே.எல்.ராகுல்- இந்திய அணி வீரர்கள் இடங்கள் என்னென்ன

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தப் பட்டியலில் 7 கோடி ரூபாய் ஊதியம் பெறும் பிரிவில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுகளின் இந்த ஆண்டுக்கான பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் ஏ பிளஸ் பிரிவுக்கு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னேறியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வரும் செப்டம்பர் வரையான நடப்பு ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஏ பிளஸ் எனப்படும் உயர்நிலை பட்டியலில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஏ என்ற பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகம்மது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்த வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

பி பட்டியலில் சட்டேஸ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், முகம்மது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளார். இதில், கடந்த ஆண்டில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த கே.எல்.ராகுல் தற்போது பி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேநேரம், சி பிரிவிலிருந்து பி பிரிவுக்கு சுப்மான் கில் உயர்த்தப்பட்டுள்ளார்.

மேலும் சி பட்டியலில் உமேஷ் யாதவ், ஷிகர் தவான், சர்துல் தாக்கூர், இஷன் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

top videos

    பட்டியலிலிருந்து இஷாந்த் சர்மா, அஜிங்யா ரகானே, விரிதிமான் சாகா, புவனேஷ்வர் குமார், ஹனுமா விகாரி, மயங்க் அகர்வால், தீபக் சாகர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    First published:

    Tags: Team India