முகப்பு /செய்தி /விளையாட்டு / ரிஷப் பந்த்தை நேரில் சந்தித்த கிரிக்கெட் பிரபலங்கள்… வைரலாகும் ஃபோட்டோ

ரிஷப் பந்த்தை நேரில் சந்தித்த கிரிக்கெட் பிரபலங்கள்… வைரலாகும் ஃபோட்டோ

ரிஷப் பந்த்துடன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், ஸ்ரீசாந்த்.

ரிஷப் பந்த்துடன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன், ஸ்ரீசாந்த்.

எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

காயத்திலிருந்து குணம் அடைந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை கிரிக்கெட் பிரபலங்கள் நேரில் சந்தித்து குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல், ராகுல் ஆகியோர் இருந்தாலும் அவர்களில் ரிஷப் பந்த் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் மற்றும் ரன் குவிப்பால் தனக்கென ஒரு இடத்தை அணியில் பிடித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். தலைநகர் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து விளையாடக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றிலும் ரிஷப் பந்த் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் ரிஷப் பந்த்தை நேரில் சந்தித்து விரைந்து குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

First published:

Tags: Cricket