முகப்பு /செய்தி /விளையாட்டு / 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்?

2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறாரா கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்?

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

எனக்கு 11 வயது இருக்கும்போதே எந்த துறையில் இருந்தாலும் நான் மிக கடினமாக உழைப்பேன். அதுதான் என் வெற்றிகளின் ரகசியம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

2024 பொதுத் தேர்தலில் ஷிகர் தவான் போட்டியிடுகிறார் என்று சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த பேட்ஸ்மேனாக ஷிகர்தவான் இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்கு விளையாடாத சூழலில் அவரை ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீட்டித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தவான் அறிமுகம் ஆனார்.

இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 6,793 ரன்களை தவான் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராகியுள்ளார். அவர் அரசியலுக்கு வருவார் என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது-

தற்போதைய சூழலில் அரசியலுக்கு வருவதற்கான எண்ணங்கள் ஏதும் எனக்கு இல்லை. ஆனால் அதுதான் என் விதி என்று எழுதியிருந்தால்  நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவேன். எந்த துறையில் நான் களம் இறங்கினாலும் 100 சதவீத அர்ப்பணிப்போடு செயல்படுவேன். நிச்சயம் எனது முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று தெரியும். எனக்கு 11 வயது இருக்கும்போதே எந்த துறையில் இருந்தாலும் நான் மிக கடினமாக உழைப்பேன். அதுதான் என் வெற்றிகளின் ரகசியம். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. ஆனால் கடவுளின் முடிவு அதுவாகத்தான் இருந்தால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். உறுதியாக சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இந்திய அணியில் ஷிகர் தவான் தற்போது இடம்பெறாத சூழலில் அவரது இடத்தில் சுப்மன் கில் விளையாடி வருகிறார். இதுகுறித்து அவர் கேட்டபோது, தான் அணியின் தேர்வாளராக இருந்தால் சுப்மன் கில்லைத்தான் தேர்வு செய்வேன் என்று தவான் கூறினார்.

First published:

Tags: Cricket