முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தோல்விக்கு இவைகள்தான் காரணம்’ – 2 ஆவது ஒருநாள் போட்டியின் முடிவு குறித்து ரோஹித் சர்மா விளக்கம்

‘தோல்விக்கு இவைகள்தான் காரணம்’ – 2 ஆவது ஒருநாள் போட்டியின் முடிவு குறித்து ரோஹித் சர்மா விளக்கம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் தோல்விக்கான காரணங்களை கேப்டன ரோஹித் சர்மா விளக்கியுள்ளார். நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 117 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் தாங்களே 11 ஓவரில் ஆட்டத்தை முடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஹெட் 51 ரன்னும், மார்ஷ் 66 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தோல்விக்கு பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது- நாம் தோல்வியடையும்போது அதிருப்தி ஏற்படும். நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் 117 ரன்கள் என்பது குறைவான ஸ்கோர். இங்கு அதிகமான ரன்கள் எடுத்திருக்க முடியும். விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து கொண்டே இருந்தோம் என்பதும் தோல்விக்கு முக்கிய காரணம்.

top videos

    சுப்மன் கில்லை முதல் ஓவரிலேயே இழந்தோம். விராட் கோலி விரைவாக ரன்களை எடுத்தார். நான் நீண்ட நேரம் களத்தில் நிற்காமல் ஆட்டமிழந்தேன். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், விக்கெட்டை காப்பாற்றும்போது ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. மிட்செல் ஸ்டார்க் தரமான பந்து வீச்சாளர். அவரது பந்துவீச்சு நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் எங்களது பேட்டர்களால் ஸ்டார்க்கின் பவுலிங்கை கணிப்பது சவாலாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது. இதையடுத்து தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

    First published:

    Tags: Cricket