முகப்பு /செய்தி /விளையாட்டு / கேஎல் ராகுல் - ஜடேஜா பொறுப்பான ஆட்டம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

கேஎல் ராகுல் - ஜடேஜா பொறுப்பான ஆட்டம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரவீந்திர ஜடேஜா 69 பந்துகளில் 45 ரன்களும், கே.எல்.ராகுல் 91 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை அடுத்து, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்காததால் இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வழிநடத்துகிறார்.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிரேவிஸ் ஹெட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், 22 ரன்கள் சேர்த்திருந்த போது. ஹர்திக் பாண்ட்யா அவரை வெளியேற்றினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 81 ரன்கள் எடுத்த போது ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவிருக்கிறது.

எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் இஷான் கிஷான் 3 ரன்களுக்கும் சுப்மன் கில் 20 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 24 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறியது.

இந்த நிலையில் கேஎல் ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் ரவீந்திர ஜடேஜா 69 பந்துகளில் 45 ரன்களும், கே.எல்.ராகுல் 91 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First published:

Tags: Cricket live score, Ind Vs Aus