முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs AUS 3ஆவது ஒருநாள் போட்டி… சென்னை வந்தடைந்தார் விராட் கோலி

IND vs AUS 3ஆவது ஒருநாள் போட்டி… சென்னை வந்தடைந்தார் விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

சென்னை போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர். சென்னை விமான நிலையம் வந்த விராட் கோலிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கயுள்ளது. மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று விசாகப்பட்டினத்தில் 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 11 ஓவரிலேயே வெற்றி பெற்று ஆட்டத்தை முடித்தனர்.

இந்நிலையில் கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். தற்போது நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சென்னை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தனர். கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Cricket