ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 117 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் 3 ஆவது பந்தில் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் விராட் கோலி – ரோஹித் சர்மா இணை நிதானமாக ரன்களை எடுத்தது. இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா 13ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 9 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.
விராட் கோலி 31 ரன்னிலும், ரவிந்திர ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழக்க அக்சர் படேல் கடைசி வரை அவுட் ஆகாமல் 29 ரன்கள் எடுத்திருந்தார். குல்தீப் யாதவ் 4 ரன்னும், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர்ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். 26 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket