முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸி.-க்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்….

ஆஸி.-க்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்….

இந்திய அணி (File Photo)

இந்திய அணி (File Photo)

இந்திய அணியிலும் ஆஸ்திரேலிய அணியிலும் ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பவுலிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியிலும் ஆஸ்திரேலிய அணியிலும் ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அந்த அணி விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தின் கே.எஸ். ராஜ ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.. முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் சர்மா பங்கேற்காத நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.  இந்நிலையில்  இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பவுலிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளின் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா விளையாடுகிறார்.ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல்லுக்கு பிதலாக எல்லீசும், இங்லீசுக்கு பதிலாக அலெக்ஸ்கேரியும் விளையாடுகின்றனர்.

First published:

Tags: Cricket