முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-ஆவது மோசமான ஸ்கோர்… விமர்சனத்திற்குள்ளாகும் இந்திய கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-ஆவது மோசமான ஸ்கோர்… விமர்சனத்திற்குள்ளாகும் இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

முந்தைய 2 குறைவான ஸ்கோர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் எடுக்கப்பட்டாலும், இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகக் குறைவான ஸ்கோரை நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி எடுத்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியஅணி 117 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 ஆவது மோசமான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் 4 பேர் டக் அவுட் ஆன நிலையில், அணியை விமர்சித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 31 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷமி, சிராஜ் ஆகியோர் டக் அவுட் ஆகினர். கேப்டன் ரோஹித் சர்மா13 ரன்னும், கே.எல்.ராகுல் 9 ரன்னும், ரவிந்திரா ஜடேஜா 16, அக்சர் படேல் 29 ரன்கள் எடுத்தனர். அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் ஆட்டத்தை முடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

top videos

    நேற்று எடுக்கப்பட்ட 117 ரன்கள் என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய எடுத்த 3 ஆவது மோசமான ஸ்கோர் ஆகும். முன்னதாக 1981-இல் சிட்னியில் நடந்த போட்டியில் 63 ரன்களும், 2000-இல் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் 100 ரன்னும் எடுத்திருந்தது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் மோசமான ஸ்கோரை இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எடுத்துள்ளது. முந்தைய 2 குறைவான ஸ்கோர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் எடுக்கப்பட்டாலும், இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகக் குறைவான ஸ்கோரை நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி எடுத்துள்ளது. உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் ஆட்டம் கவலையளிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Cricket