உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை, முகமது சிராஜ் டக்-அவுட்டாக்கி அசத்தினார். டேவிட் வார்னர் தனது பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார்.
நான்காவது விக்கெட்டிற்கு கைகோர்த்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக ஆடி, ரன்களை குவித்தனர். அதேவேளையில் கிடைத்த பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டி சற்று அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார்.
இப்போட்டியில் இந்திய அணி, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குதலை தொடுத்த போதும் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் சோர்வடைந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலிய அணி, இன்றும் தனது அதிரடியை தொடர்ந்தது. ஸ்மித்தும் சதமடிக்க, இறுதியில் அலெக்ஸ் கேரி தனது அதிரடியை தொடர்ந்தார்.
ஆஸ்திரேலிய அணி, 469 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும், ஆட்டமிழக்க, பிறகு வந்த விராட் கோலி புஜாராவின் மேல் இந்திய ரசிகர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்தனர்.
ஆனால் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு இழந்தனர். இதையடுத்து அஜிங்கியா ரஹானே - ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஜடேஜா, 51 பந்துகளில் 48 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ரஹானே - பரத் ஜோடி விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
469 என்ற ஆஸ்திரேலியாவின் இமாலய ரன்களுக்கு மேல் இந்திய அணி ரன்கள் சேர்த்து லீட் வைக்குமா? என்பது இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.