முகப்பு /செய்தி /விளையாட்டு / INDVSAUS : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மும்பையில் இன்று பலப்பரிட்சை..!

INDVSAUS : இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மும்பையில் இன்று பலப்பரிட்சை..!

ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியா

ஸ்டீவ் ஸ்மித் - ஹர்திக் பாண்டியா

முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா விளையாடவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது.

மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா விளையாடவில்லை. ரோஹித் களமிறங்காததால் ஹர்திக் பாண்ட்யா இப்போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார்.

ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர். இந்திய நேரப்படி இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 19ம் தேதி விசாகப்பட்டினத்திலும், மார்ச் 22ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடைசியாக மோதிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: BCCI, Hardik Pandya, Ind Vs Aus, India vs Australia, Indian cricket team