முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 123 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaLondonLondon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 469 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை விட தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும், ஆட்டமிழக்க, பிறகு வந்த விராட் கோலி புஜாராவின் மேல் இந்திய ரசிகர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்தனர். ஆனால் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு இழந்தனர். இதையடுத்து அஜிங்கியா ரஹானே - ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஜடேஜா, 51 பந்துகளில் 48 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து ரஹானே - ஷர்தூல் தாக்கூர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்தது. இந்தப்போட்டியில் நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்த  ரஹானே 89 ரன்களுக்கு அவுட்டானார்.

பந்துவீச்சாளர் ஷர்தூல் தாக்கர் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  ஆஸ்திரேலியா அணி சார்பில், கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், போலாண்ட், க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் இழந்தது. வார்னர் 1 ரன்னிலும், கவாஜா 13 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களிலும், ஹெட் 18 ரன்னிலும் அட்டமிழந்தனர். லபுஷேன் 41 ரன்னுடனும், கேமரன் க்ரீன் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 3ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அந்த அணி  296 ரன்கள்  முன்னிலை பெற்று  வலுவான நிலையில் உள்ளது.

First published:

Tags: ICC World Test Championship, India vs Australia