முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs AUS 3rd ODI : இந்திய அணி வெற்றிபெற 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா…

IND vs AUS 3rd ODI : இந்திய அணி வெற்றிபெற 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா…

விக்கெட்டுகளை வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய அணி.

விக்கெட்டுகளை வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய அணி.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று தொடரில் சமநிலை பெற்றது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் களத்தில் இறங்கினர்.

அணி 68 ரன்கள் எடுத்திருந்தபோது டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 1 சிக்சர் 8 பவுண்டரியுடன் 47 ரன்கள் சேர்த்த மிட்செல் மார்ஷ் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் டேவிட் வார்னர் 23 ரன்களும், மார்னஸ் லபுஸ்சேன் 28 ரன்களும் எடுத்தனர்.

top videos

    சிறிது நேரம் தாக்குப்பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 38 ரன்கள் சேர்த்தார். அதிரடி ரன் குவிப்பிற்கு  பெயர்போன மார்கஸ் ஸ்டாய்னிசால் 25 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து வந்த சீன் அபாட் 26 ரன்களும், ஆஷ்டன் அகர்17 ரன்களும் எடுத்தனர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் 10 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 49 ஓவர்கள் முடிவில் 269 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகம்மது சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களத்தில் இறங்கியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

    First published:

    Tags: Cricket