முகப்பு /செய்தி /விளையாட்டு / IND VS AUS : இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு..!

IND VS AUS : இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு..!

ஸ்மித்

ஸ்மித்

IND vs AUS : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

  • Last Updated :

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் மிட்செல் ஸ்டார்கின் மிரட்டலான பந்துவீச்சால் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானம் சுமார் 40,000 இருக்கைகளோடு புதுப்பொலிவு பெற்றுள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த தொடரில், வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்தப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Also Read:  Ind vs Aus : மகுடம் யாருக்கு..? சென்னை சேப்பாக்கத்தில் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா..

சேப்பாக்கம் மைதானத்திற்குள் கண்ணாடி பாட்டில், கத்தி, மதுபானம், சிகரெட், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், அரசியல் பதாகைகள், கேமரா உள்ளிட்டவை எடுத்துச்செல்வதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தடை விதித்துள்ளது.

First published: