முகப்பு /செய்தி /விளையாட்டு / தொடரை வெல்லுமா இந்தியா..? ஆஸ்திரேலியாவுடன் இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..!

தொடரை வெல்லுமா இந்தியா..? ஆஸ்திரேலியாவுடன் இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி..!

ரோகித் சர்மா- ஸ்டீவ் ஸ்மித்

ரோகித் சர்மா- ஸ்டீவ் ஸ்மித்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது இன்றைய போட்டியில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Visakhapatnam, India

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனால் ஒருநாள் தொடரையும் வெற்றி பெறும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடரில், மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. ஃபார்மில் இல்லை என விமர்சிக்கப்பட்ட கே.எல்.ராகுலும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அசத்தினார். டாப் ஆர்டரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறும்.

உறவினர் இல்ல திருமணம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால், ஷுப்மன் கில் அல்லது இஷான் கிஷனில் ஒருவர் தான் இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை உள்ளது.

இதையும் படிக்க :   WPL : ஆர்.சி.பி.-க்கு 2ஆவது வெற்றி… 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது…

இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி வீரர்களும். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய வீரர்களும் களமிறங்குவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி, விசாகப்பட்டினத்தில் பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இன்று மாலை விசாகப்பட்டினத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே போட்டி சிறிதுநேரம் தடைபடலாம் என்றும், ஓவர்கள் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ind Vs Aus, India captain Rohit Sharma, India vs Australia, INDvAUS, Virat Kohli