முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இன்னும் 30 டெஸ்டில் விளையாடினால் 25 சதங்களை கோலி அடிப்பார்’ – ஷொயப் அக்தர் புகழாரம்

‘இன்னும் 30 டெஸ்டில் விளையாடினால் 25 சதங்களை கோலி அடிப்பார்’ – ஷொயப் அக்தர் புகழாரம்

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் – அக்தர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

விராட் கோலி இன்னும் 30 டெஸ்ட்களில் விளையாடினால் மேலும் 25 சதங்களை அடிப்பார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து கவனம் பெற்றார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் கோலி சதம் அடித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலியின் டெஸ்ட் ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலி இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். டி20 ஃபார்மேட் போட்டிகள் அவரது எனர்ஜியை வீணடிக்கின்றன. அவர் டி20 போட்டிகளில் விளையாட விரும்புகிறார். அவருக்கு 34 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்.

கோலியால் இன்னும் 6-8 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும். அவர் இன்னும் 30-50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் மேலும் அவரால் 25 சதங்களை எளிதாக அடிக்க முடியும். கோலியின் ஃபிட்னெஸ் அற்புதமாக உள்ளது. மன நலம் மற்றும் உடல் நலனில் கோலி அதிக கவனம் செலுத்துகிறார். ஒரு விளையாட்டு வீரருக்கு இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 8,416 ரன்களை குவித்துள்ளார்.

First published:

Tags: Cricket