முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி...

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 915 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு 2 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணி மொத்தம் 121 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இடத்திலும், 114 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன. 104 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி 4 ஆவது இடத்தையும், 100 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 915 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சனுக்கு 2 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் உள்ளனர். டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின் 869 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் கசிகோ ரபடா, பாகிஸ்தான் அணியின் ஷாஹின் அப்ரிதி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

top videos

    ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 113 புள்ளிகளைப் பெற்றுள்ளன. தகுதியின் அடிப்படையில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2 ஆவது இடத்தில் நியூசிலாநது அணியும், 3 ஆவது இடத்தில் இந்திய அணியும் உள்ளன. டி20 அணிகளில் 267 புள்ளிகளுடன் இந்தியா முதலித்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    First published:

    Tags: Cricket, Test match