முகப்பு /செய்தி /விளையாட்டு / பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முன்னேற்றம்…

பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சுப்மன் கில் முன்னேற்றம்…

சுப்மன் கில்

சுப்மன் கில்

சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் முன்னேற்றம் கண்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் சூர்ய குமார் யாதவ் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி டெஸ்ட் போட்டிகளில் உலகில் நம்பர் ஒன் அணியாக 122 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 119 புள்ளிகளுடன் இந்திய அணி 2 ஆவது இடத்திலும், 106 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3 ஆவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத் இடங்களில் இருக்கின்றன.

டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் நீடிக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோரூட், பாகிஸ்தானின் பாபர் ஆசம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் அஷ்வின் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த பிரிவில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணியின் வான் டர் டசன் 2 ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாமுல் ஹக் 3 ஆவது இடதிலும் உள்ளனர். இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டி20 பிரிவில் இந்திய அணி 267 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 261 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 2 ஆவது இடத்திலும் பாகிஸ்தான்,தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் பாகிஸ்தான் அணியின் முகம்மது ரிஸ்வான், நியூசிலாந்தின் டெவோன் கான்வே, பாகிஸ்தானின் பாபர் ஆசம், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

First published:

Tags: Cricket