முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்… 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் தொடக்கம்

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்… 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் தொடக்கம்

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்

உலகக்கோப்பையை வென்ற அணிகளான இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை தகுதிச்சுற்றில் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் 10 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-யில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்றேறும். மற்ற அணிகள் வெளியேறி விடும். சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் ஏயில் உள்ள அணிகள் குரூப் பி யில் உள்ள அணிகளுடன் மோதும். தகுதிப் போட்டிகள் ஜூன் 18 ஆம் தேதி தொடங்குகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகின்றன.

இதையும் படிங்க - சர்வதேச தடகள வீராங்கனையாக உயர்ந்த தென்காசி பள்ளி மாணவி..!

top videos

    அனைத்து போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெறும். இந்த தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பையை வென்ற அணிகளான இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை தகுதிச்சுற்றில் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Cricket