மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை நேற்று நடந்த இறுதிப் போட்டிதிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளது. வெற்றிக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- தனிப்பட்ட முறையில் இதுபோன்றதொரு தருணத்திற்காகத்தான் நான் நீண்ட காலமாக காத்திருந்தேன். மும்பை அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டபோது இது மிகவும் முக்கியமான பொறுப்பு என்பதை உணர்ந்தேன். இது நிச்சயமாக மகளிர் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினேன். அது நடந்திருக்கிறது.
இந்த தொடரில் நாங்கள் பெற்ற வெற்றி அடுத்த தொடரிலும் நீடிப்பதற்கு நான் விரும்புகிறேன். எங்கள் அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனைகள் இந்திய அணியில் விளையாடியதைப் போன்றே 100 சதவீத பங்களிப்பை கொடுத்தனர். இறுதிப் போட்டியில் எங்களது பவுலர்களின் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது. அவர்களே எதிரணிக்கான ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதில் உறுதியாக இருந்து செயல்படுத்தினார்கள். இந்த தொடர் முழுவதும் அவர்கள் ஒரே மாதிரியான யுக்தியை பயன்படுத்தினார்கள்.
ஆட்டத்தில் நாம் களம் இறங்குகிறோம் என்றால் தெளிவான மன நிலை மற்றும் வியூகம் அவசியம். இவை இருந்தால் மட்டுமே நம்மால் வெற்றியை சாத்தியப்படுத்த முடியும். இந்த காரணங்களால்தான் எங்கள் பவுலர்கள் அதிக விக்கெட்டுகளை எளிதாக எடுத்தனர். குறைந்த பந்தில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்த போதிலும் எங்களது பேட்டர்கள் நேட் சீவர் – அமெலியா கெர் ஆகியார் எந்த பதட்டமும் இன்றி திறமையை வெளிப்படுத்தினர். அழுத்தம் அதிகரிக்கும்போது நாம் எந்த அளவுக்கு நம்மை அமைதிப் படுததிக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு பலன்கள் ஏற்படும். திறமை அடிப்படையில் யாரும் யாரை விடவும் குறைந்தவர்கள் கிடையாது. ஏனென்றால் எல்லோரும் கடினமாக பயிற்சியை மேற்கொள்கிறார்கள். களத்தில் யார் மன வலிமையுடன் போராடுகிறார்கள் என்பதே வெற்றிக்கு காரணமாக அமையும். இந்த தொடரில் சர்வேச வீராங்கனைகளிடம் இருந்து இந்திய வீராங்கனைகள் பல முக்கியமான விஷயங்களை கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: WIPL