முகப்பு /செய்தி /விளையாட்டு / 100 ஆவது போட்டியில் 1 ரன்… ஒன் டே மேட்ச்சுகளில் புதிய சாதனை படைத்த பாபர் ஆசம்

100 ஆவது போட்டியில் 1 ரன்… ஒன் டே மேட்ச்சுகளில் புதிய சாதனை படைத்த பாபர் ஆசம்

பாபர் ஆசம்

பாபர் ஆசம்

இந்திய அணியின் ஷிகர் தவான் 3 ஆவது இடத்திலும், விராட் கோலி 9 ஆவது இடத்தில் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகிஸ்தான் அணியின் கேப்டன பாபர் ஆசம் தனது 100 ஆவது ஒருநாள் போட்டியில் ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்தார். இருப்பினும் ஒட்டுமொத்தமாக 100 ஒருநாள் போட்டிகளின் அடிப்படையில் உலக சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களின் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

நேற்று நடந்த 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாலும் பாகிஸ்தானிடம் அந்த அணி தொடரை இழந்திருக்கிறது. நேற்றைய ஆட்டம் பாபர் ஆசமுக்கு 100 ஆவது போட்டியாகும். இதில் அவர் ஒரேயொரு ரன்னை மட்டுமே எடுத்தார். இருப்பினும் 100 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் ஆசம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் ஷிகர் தவான் 3 ஆவது இடத்திலும், விராட் கோலி 9 ஆவது இடத்தில் உள்ளனர்.

100 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் பின் வருமாறு-

  • பாபர் ஆசம் – பாகிஸ்தான் – 5,089 ரன்கள்
  • ஹாஷிம் ஆம்லா – தென்னாப்பிரிக்க – 4,808 ரன்கள்
  • ஷிகர் தவான் – இந்தியா – 4,309 ரன்கள்
  • டேவிட் வார்னர் – ஆஸ்திரேலியா – 4,217 ரன்கள்
  • ஷாய் ஹோப் – வெஸ்ட் இண்டீஸ் – 4,193 ரன்கள்
  • கோர்டன் கீரீனிட்ஜ் – 4,177 ரன்கள்
  • ஜோ ரூட் – இங்கிலாந்து – 4,164 ரன்கள்
  • விவியன் ரிச்சர்ட்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் – 4,146 ரன்கள்
  • விராட் கோலி – இந்தியா – 4,107 ரன்கள்
top videos

    First published:

    Tags: Babar Azam, Cricket