ஒருநாள் போட்டிகளை விறுவிறுப்பு நிறைந்ததாக ஹர்திக் பாண்ட்யா மாற்றுவார் என்று முன்னாள் வீரர் ஜடேஜா பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடர்களின் வரவால் ஒருநாள் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் ஹர்திக் பாண்ட்யா இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் கேப்டன ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட்டார். முதல் போட்டியின் வெற்றிக்கு பின்னர் முன்னாள் வீரரும் , வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா கூறியதாவது- எப்போதும் ஹர்திக் பாண்ட்யா வித்தியாசமான முறையில் விளையாடுகிறார். அவருடைய கேப்டன்ஷிப்பில் வேகம் இருக்கிறது.
ஷமி,சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக பயன்படுத்தியதுடன் தானும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசுகிறார் பாண்ட்யா. நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளை விறுவிறுப்பு மிக்கதாக மாற்றுவார். தோனி, கேன் வில்லியம்சன் என சிறந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஸ்டைல் உள்ளது. அதேபோன்றுதான் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இருக்கிறது. அது எதிரணியை கடுமையாக தாக்கும் அட்டாக்கிங் ஸ்டைல். அது ஒருநாள் போட்டிகளை இன்னும் சுவாரசியமாக மாற்றும். இவ்வாறு அவர் கூறினார். இன்று நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறுவதால் ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக செயல்படுவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket