முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா - ஆஸி 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு...!

இந்தியா - ஆஸி 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி... சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு...!

கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் ரசிகர்கள்

cricket fans Restrictions | சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Chennai [Madras], India

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் மிட்செல் ஸ்டார்கின் மிரட்டலான பந்துவீச்சால் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்த தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இதுவரை 37 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துள்ளன. சேப்பாக்கம் மைதானத்திற்குள் கண்ணாடி பாட்டில், கத்தி, மதுபானம், சிகரெட், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், அரசியல் பதாகைகள், கேமரா உள்ளிட்டவை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கவுள்ளது. இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரசிகர்களுக்காக சென்னை மெட்ரோ ரயில், அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக மினி பஸ் சேவை ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Bus, Chennai, Cricket