முகப்பு /செய்தி /விளையாட்டு / 180 ரன்கள் குவித்த பகர் ஜமான்… நியூசிலாந்திற்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

180 ரன்கள் குவித்த பகர் ஜமான்… நியூசிலாந்திற்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

ஆட்டநாயகன் விருது பெற்ற பகர் ஜமான்

ஆட்டநாயகன் விருது பெற்ற பகர் ஜமான்

கேப்டன் பாபர் ஆசம் - பகர் ஜமான் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான் 180 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால் தொடர் டிராவில் முடிந்தது. ஒரு போட்டியில் முடிவு அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெறறு வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டி நேற்று ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங் மற்றும் சாத் போஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். யங் 19 ரன்னில் வெளியேற போஸ் 51 ரன்கள் எடுத்தார்.

top videos

    அடுத்து வந்த டேரில் மிட்செல் அற்புதமாக விளையாடி சதம் விளாசினார். 111 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 129 ரன்கள் எடுத்தார். கேப்டன் டாம் லாதம் 98 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 336 ரன்கள் குவித்தது. இதையடுத்து 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் இமாமுல் ஹக் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுதது கேப்டன் பாபர் ஆசமுடன் இணைந்து பகர் ஜமான் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாபர் ஆசம் 65ரன்னும் அடுத்து வந்த அப்துல்லா ஷபிக் 7 ரன்னும் எடுத்து வெளியேறினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுததிய பகர் ஜமான் 144 பந்துகளில் 6 சிக்சர் மற்றும் 17 பவுண்டரியுடன் 180 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக முகமது ரிஸ்வான் 54 ரன்கள் சேர்க்க 48.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி 337 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    First published:

    Tags: Cricket