முகப்பு /செய்தி /விளையாட்டு / #EXCLUSIVE : மகளிர் ஐபிஎல் தொடரில் அசத்திய தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன்… அனுபவம் பகிரும் சிறப்பு பேட்டி…

#EXCLUSIVE : மகளிர் ஐபிஎல் தொடரில் அசத்திய தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன்… அனுபவம் பகிரும் சிறப்பு பேட்டி…

ஹேமலதா தயாளன்

ஹேமலதா தயாளன்

கடவுளின் ஆசீர்வாதத்தால் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் குஜராத் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடுகிறேன். எனவே ரசிகர்கள் அனைவரும் என்னை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜியோசினிமா, SPORTS 18 மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான தொடக்க  மகளிர் பிரிமியர் லீக் போட்டியில் விளையாடிய தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன் தன்னுடைய அனுபவங்களை கூறுகிறார். அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ:

1. உங்கள் கிரிக்கெட் விளையாட்டின் அனுபவத்தைக்கூறுங்கள்:

எதிரணி வீரர்கள் மற்றும் பிற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை எதிர்கொள்வது மிகவும்  உற்சாகமான அனுபவமாகும். ஏனெனில் அவர்கள் அனைவருடனும் போட்டியிட்டு  விளையாடி வெற்றி பெறுவது  மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

2. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் லாரா ஹரிஸ் பற்றிய உங்கள் கருத்து:

லாரா மிகவும் அமைதியாக இருந்து விளையாட்டின் நுணுக்கங்களை தெளிவாக கணித்து ஆட்டத்தை விளையாடுவது என்னை மிகவும் ஈர்த்தது.

3. வெளிநாட்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பற்றி:

ஆஷ்லே கார்ட்னர், சோபியா டங்க்லி, மற்றும் கிம் கார்த்  மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் நான் அவர்களுடன் மிகவும் நெருங்கி பழகுவதால் எனக்கு இவர்கள் அன்னியர்களாக  தெரியவில்லை. இது எங்கள் அணிக்கு ஒரு பெரிய பலம் மற்றும் கூட்டணி மூலம் அணியை  வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்

4. மகளிர் பிரிமியர் லீக்-க்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம்:

உண்மையில் எங்களிடம் 19 வயதுக்குட்பட்ட இளம் வீரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுபவம் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும்  பேட்ஸ்மேன்கள் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் என்று தெரிகிறது

5. உங்கள் நிஜ வாழ்க்கை பயணம்:

உண்மையில் 17 வயது முதல் 18 வயது வரை நான் சிறுவர்களுடன் தெருவில்  கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அதன் பிறகு கிரிக்கெட் மீதான அளாதிய எனது ஆர்வமே எனது தொழிலாக மாறியது. கடவுளின் கிருபையால் அது நன்றாகவே நடந்தது மற்றும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.

6. மகளிர் பிரிமியர் லீக் போட்டியாளர்கள் தேர்வு நடவடிக்கை குறித்த உங்கள் கருத்து:

மகளிர் பிரிமியர் லீக் ஏலம் நடக்கும் போது நான் என் பெற்றோருடன் வீட்டில் இருந்தேன். ஏனெனில் நான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் சேர்வேனா இல்லையா பதற்ற நிலைக்கு சென்றேன். பின் குஜராத் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த உடனே நான் மட்டுமில்லாமல் எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.  குறிப்பாக மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய விளையாட்டு வீரர்களான  நூதன் மற்றும் மிதாலி இருவரும் எனது கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களின் பணியை அறிந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

7. உங்களை கவர்ந்த சில பந்து வீச்சாளர்களை பெயரிடுங்கள்:

நான் எப்போதும் என்னுடைய விளையாட்டை சிறப்பான முறையில் வெளிபடுத்த வேண்டும் என்பதில் உறுதியாக செயல்படுவதால் பல பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட அனுபவம் எனக்கு இல்லை. நான் மிகவும் வியந்த இருவர் எனில் அமெலிகிரா மற்றும் சோஃபி ஆகியோர் எனக்கு கடினமான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று என்னால் கூற முடியும்

8. குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் ரசிகர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்:

கடவுளின் ஆசீர்வாதத்தால் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் குஜராத் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடுகிறேன். எனவே ரசிகர்கள்  அனைவரும் என்னை  ஆதரித்து  ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

9. உங்களை பற்றிய குறிப்புகள்:

வணக்கம் நான் ஹேம தயாலன்.நான் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடிகிறேன். ரசிகர்கள் அனைவரும் என்னை ஆதரிக்கவும். எனது முன்மாதிரி மிதாலி ராஜ் மற்றும் எம்எஸ் தோனி. கிரிக்கெட்டைத் தவிர என்னுடைய பொழுதுபோக்கு,  மொபைலில் வீடியோ கேம்களை விளையாடுவது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணியில் என்னுடைய க்ரைம் பார்ட்னரான மேக்னாவுடன் அதிக நேரத்தை செலவிடுவேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் எதிர்கொண்ட கடினமான பந்து வீச்சாளர் நியூசிலாந்தைச் சேர்ந்த தாஹுஹு ஆவார். மகளிர் பிரிமியர் லீக்கில் இருந்து  நான் வெளிநாட்டு வீரர்களின் அனுபவத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்

First published:

Tags: WIPL