146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பயிற்சி ஆட்டம் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 524 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2 ஆவது இன்னிங்ஸில் அயர்லாந்து அணி 362 ரன்னுக்கு ஆட்டமிழக்க அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 4 பந்துகளில் வெற்றி இலக்கான 11 ரன்களை கடந்து போட்டியை வென்றது. இந்த மேட்ச்சில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கேப்டனாக அவர் 2 இன்னிங்ஸ்களில் பேட்டிங்கும் செய்யவில்லை, பந்தும் வீசவில்லை. அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் 146 ஆண்டுகாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் விளையாடி இரண்டிலும் பேட்டிங் பவுலிங் செய்யாமல் வெற்றி பெற்ற முதல் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.
புதிய சாதனை படைதிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் 205 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது கவனிக்கத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket