முகப்பு /செய்தி /விளையாட்டு / அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

இங்கிலாந்து  கிரிக்கெட் அணி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி

முதல் இன்னிங்சை போல் இல்லாமல் 2ஆவது இன்னிங்ஸில் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் சுதாரித்து விளையாடினர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரட்டை சதம் அடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு பயிற்சி ஆட்டம் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வென்ற நிலையில், டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்ய, முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி 56.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 524 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஒல்லி போப் 205 ரன்களையும், டக்கெட் 182 ரன்களும் குவித்தனர். இதையடுத்து 352 ரன்கள் பின் தங்கிய நிலையில் அயர்லாந்து அணி 2 ஆவது இன்னிங்சை தொடர்ந்தது.

முதல் இன்னிங்சை போல் இல்லாமல் இந்த முறை அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் சுதாரித்து விளையாடினர். ஹேரி டெக்டர் 51 ரன்னும், விக்கெட் கீப்பர் டக்கர் 44 ரன்களும் சேர்க்க ஆண்டி மெக்ப்ரைன் 86 ரன்னும், மார்க் அடைர் 88 ரன்களும் குவித்தனர். 86.2 ஓவர்களில் அயர்லாந்துஅணி 362 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பின்னர் 11 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி முதல் 4 பந்துகளிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

First published:

Tags: Cricket