முகப்பு /செய்தி /விளையாட்டு / 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப்… குவியும் பாராட்டு

41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப்… குவியும் பாராட்டு

ஒல்லி போப்

ஒல்லி போப்

முன்னதாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இயான் போத்தம் 220 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்திருந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒல்லி போப் 41 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். தனது முதல் இரட்டை சத்தத்தை அதிவேகமாக விளாசி, போப் இந்த சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து அயர்லாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 56.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராடு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 524 ரன்களை 4 விக்கெட் இழப்புக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஒல்லி போப் 205 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இவர் வெறும் 207 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து 41 ஆண்டு கால சாதனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அதாவது இங்கிலாந்து மண்ணில் அதிவேகமாக அடிக்கப்பட்டதாக ஒல்லி போப்பின் இந்த இரட்டைச் சதம் அமைந்தது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இயான் போத்தம் 220 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்திருந்தார். அதுவே இதுநாள் வரைக்கும் சாதனையாக இருந்து வந்தது. அதனை ஒல்லிப்போப் முறியடித்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க- இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்ஸி அறிமுகம்… கவனம் ஈர்க்கும் பிசிசிஐ வீடியோ

நேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 255 ரன்கள் அயர்லாந்து அணி பின் தாங்கியுள்ள நிலையில், இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

First published:

Tags: Cricket