இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஒருவரை குறிப்பிட்டுள்ள முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக், அவர்தான் முக்கிய ஆட்டக்காரராக எதிர்காலத்தில் இருப்பார் என்று கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை கிரிக்கெட் என இந்திய வீரர்கள் அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் பிஸியாக உள்ளனர். ஆஸ்திரேலிய அணியிடம் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது. அடுத்தடுத்து முக்கியமான தொடர்களில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், இந்த தோல்வி நல்லதொரு பாடமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இவரது தலைமையில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. மற்ற இரண்டு போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை வகித்தார். அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், விமர்சகருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது- பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஹர்திக் பாண்டியா ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மிக மிக முக்கியமான ஆட்டக்காரராக அவர் இருக்கிறார் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை.
ஹர்திக் பாண்டியாவால் ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் வரை வீச முடியும். அதே நேரம் மிக குறைந்த பந்துகளில் அதிரடியாக அவரால் ரன்கள் சேர்க்கவும் முடியும். இதன் அடிப்படையில் அவரை மிகவும் ஆபத்தான ஆட்டக்காரராக கருதலாம். முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணியை சில சமயங்களில் அவர் திணறடிக்கிறார். அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அவர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருந்தால் இந்திய அணிக்கு அது பலமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket