முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி... கோப்பை யாருக்கு..? டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்..!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி... கோப்பை யாருக்கு..? டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்..!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி போட்டி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி போட்டி

இவ்விரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் மும்பை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

  • Last Updated :
  • Mumbai, India

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடர், 15 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக வீர நடைபோட்டு வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி-20 போட்டியை முதல்முறையாக இந்த ஆண்டு பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு இணையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டெல்லி அணியை பொறுத்தவரை லீக் சுற்றில் 6 வெற்றிகளை பதிவு செய்து, ரன் விகித அடிப்படையில் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கேப்டன் மெக் லானிங் (Meg Lanning), டெல்லி அணியின் தூணாக விளங்குகிறார். இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 310 ரன்களுடன், அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில்  முதலிடத்தை அலங்கரித்துள்ளார். இவரை கட்டுப்படுத்துவதே மும்பை அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்,

பேட்டிங்கில் ஷபாலி வர்மா (Shafali Verma), ஜெமிமா, ஆலிஸ் கேப்ஸி (Alice Capsey) மரிசனே (Marizanne) ஆகியோரும் பக்கபலமாக உள்ளனர். பந்துவீச்சிலும் டெல்லி வீராங்கனைகள் கைகொடுத்தால் மும்பை அணி கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

இதையும் படிக்க :  மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி : 2ஆவது தங்கம் வென்றது இந்தியா!

மும்பை அணியை பொறுத்தவரை அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளில் நாட் சிவிர், ஹேலி மேத்யூஸ் முறையே 3 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர். மேலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் எதிரணிக்கு சிம்ப சொப்பணமாக விளங்குகிறார். இவர்களில், யாரேனும் ஒருவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே மும்பையின் ரன்களை கட்டுப்படுத்துவது கடினம்.

மேலும், மும்பை அணி பந்துவீச்சில அசுர பலத்தில் உள்ளது. அதிக விக்கெட் வீழ்த்திய டாப்-5 வீராங்கனைகளில் 4 பேர் மும்பை வீராங்கனைகள் என்பதே இதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் இசபெல்லா வாங் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து கவனம் ஈர்த்தார்.

இதையும் படிக்க :  மகளிர் குத்துச்சண்டை : உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் நிது கங்காஸ்..

இவ்விரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் மும்பை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது

top videos

    எனவே, மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் சமபலம் வாய்ந்த டெல்லி - மும்பை அணிகள் நேருக்கு நேர் மோதுவதால் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Delhi Capitals, Mumbai Indians, Women Cricket, Women's Premier League