நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் போட்டிகள் தொடர்பான அட்டவணை வெளியானது. அதில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி அணியின் கேப்டன் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் அண்மையில் கார் விபத்தில் சிக்கினார். இதனால் டெல்லி அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், அந்த அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக இந்திய வீரர் அக்சர் பட்டேல், இவரது தலைமையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது . இவரது தலைமையிலான அணி 69 போட்டிகளில் 35-ல் வெற்றிபெற்றுள்ளது. இதனிடையே, கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊன்றுகோல் உதவியுடன் நீச்சல் குளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் காட்சியை பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: David Warner, Delhi Capitals, IPL 2023