முகப்பு /செய்தி /விளையாட்டு / மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக டேரன் சமி நியமணம்

மேற்கிந்திய தீவுகளின் பயிற்சியாளராக டேரன் சமி நியமணம்

டேரன் சாமி

டேரன் சாமி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக டேரன் சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அண்மைக் காலமாக மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாறி வருகிறது. ஊதிய பிரச்னை மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் சங்க செயல்பாடு குறித்து வீரர்களிடம் எழுந்த அதிருப்தி உள்ளிட்ட விவகாரங்களால் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இவரின், தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு முறை டி-20 உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆண்ட்ரே கூலே நியமிக்கப்பட்டுள்ளார்.

top videos

    மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன் எனவும் டேரன் சமி தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Cricket, ICC world cup, West indies