முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 Cricket : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் த்ரில்லிங் வெற்றி

T20 Cricket : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் த்ரில்லிங் வெற்றி

வெற்றிக் கோப்பையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி.

வெற்றிக் கோப்பையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி.

கடைசி நேரத்தில் வெற்றி இரு அணிக்கும் கிடைக்க வாய்ப்பு இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில்லிங்கான வெற்றியை பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், 3 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்றுள்ளது.. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில் 3ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரான்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். மேயர்ஸ் 17 ரன்னில் வெளியேற அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜான்சன் சார்லஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் இணைந்த நிகோலஸ் பூரன் – கிங் இணை தென்னாப்பிரிக்க பந்து வீச்சை விளாசியது. இருவரும் அதிரடியாக ரன்களை சேர்க்க 8.3 ஓவரில் அணி 94 ரன்களை எடுத்திருந்தபோது, பிராண்டன் கிங் 36 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்தவர்களில் கேப்டன் பவெல் 11 ரன்னும் ரெய்ஃபர் 27 ரன்னும், ஹோல்டர் 13 ரன்னும் எடுத்தனர். 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த பூரன் அணியின் ரன் குவிப்புக்கு உதவினார். கடைசி நேரத்தில் ரொமேரியா ஷெபர்ட் 22 பந்தில் 44 ரன்கள் எடுத்து அதிரடி காட்ட அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்தது.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் – ரீசா ஹென்றிக்ஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 21 ரன்னில் டி காக் வெளியேற, அடுத்துவந்த ரோசோவுடன் இணைந்து ஹென்றிக்ஸ் அதிரடி காட்டினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரோசோ 42 ரன்னும், ஹென்றிக்ஸ் 83 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  கடைசி நேரத்தில் வெற்றி இரு அணிக்கும் கிடைக்க வாய்ப்பு இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 213 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

First published:

Tags: Cricket