முகப்பு /செய்தி /விளையாட்டு / நெதர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 370 ரன்கள் குவிப்பு…

நெதர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 370 ரன்கள் குவிப்பு…

எய்டன் மார்க்ரம்

எய்டன் மார்க்ரம்

அதிரடியாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 126 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 17 பவுண்டரியுடன் 175 ரன்கள் குவித்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நெதர்லாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 370 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் எய்டன் மார்க்ரம் 126 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். நெதர்லாந்து கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி பயிற்சி ஆட்டமாக தென்னாப்பிரிக்கா இன்விடேஷன் அணிக்கும் – நெதர்லாந்துக்கும் இடையே நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா இன்விடேஷன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் குவின்டன் டி காக், கேப்டன் பவுமா ஆகியோர் களத்தில் இறங்கினர். பவுமா 6 ரன்னும், குவின்டன் டி காக் 8 ரன்னும் எடுத்து வெளியேற அடுத்து வந்த வாண் டர் டசன் 25 ரன்கள் எடுத்தார். இதன்பின்னர் இணைந்த மார்க்ரம், மில்லர் இணை அதிரடியாக விளையாடிய ரன்களை சேர்த்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 199 ரன்கள் சேர்த்தனர். 61 பந்தில் 91 ரன்கள் எடுத்து மில்லர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 126 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 17 பவுண்டரியுடன் 175 ரன்கள் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 370 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 371 ரன்கள் எடுததால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.

First published:

Tags: Cricket