முகப்பு /செய்தி /விளையாட்டு / மழை காரணமாக நியூசிலாந்து – இலங்கை இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது…

மழை காரணமாக நியூசிலாந்து – இலங்கை இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது…

முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் வெள்ளியன்று நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மழை காரணமாக நியூசிலாந்து – இலங்கை இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது. இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில், இரண்டிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30-க்கு கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

top videos

    மழை பெய்வது குறைந்தால், ஓவர்களை குறைத்து ஆட்டத்தை ஆரம்பிக்க நடுவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் மழை ஓயாமல் பெய்தததால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது. 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் வெள்ளியன்று நடைபெறுகிறது.

    First published:

    Tags: Cricket