முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா – ஆஸ்திரேலியா 2ஆவது ஒருநாள் போட்டியை நேரலையாக பார்ப்பது எப்படி?

இந்தியா – ஆஸ்திரேலியா 2ஆவது ஒருநாள் போட்டியை நேரலையாக பார்ப்பது எப்படி?

ரோஹித் சர்மா - ஸ்டீவன் ஸ்மித்

ரோஹித் சர்மா - ஸ்டீவன் ஸ்மித்

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – ஆஸ்திரேலியான இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியை டிவி மற்றும் ஆன்லைனில் பார்ப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அந்த அணி விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தின் கே.எஸ். ராஜ ரெட்டி மைதானத்தில் இன்று மதியம் 1.30-க்கு தொடங்கி நடைபெறுகிறது. முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் சர்மா பங்கேற்காத நிலையில், ஹர்திக் பாண்ட்யா அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.  இந்நிலையில்  இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் காண்கிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டியை கண்டு ரசிக்கலாம். ஆன்லைனில், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த போட்டியை லைவ் செய்கிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்பை டவுண்லோட் செய்து, சந்தாதாரர் ஆகுவதன் மூலம் 2 ஆவது ஒருநாள் போட்டியை மொபைல், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளில் பார்க்கலாம்.

First published:

Tags: Cricket