முகப்பு /செய்தி /விளையாட்டு / சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டிக்கெட் வாங்க அதிகாலை முதல் காத்துக்கிடந்த ரசிகர்கள்..!

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டிக்கெட் வாங்க அதிகாலை முதல் காத்துக்கிடந்த ரசிகர்கள்..!

இரவு முழுவதும் காத்திருக்கும் ரசிகர்கள்

இரவு முழுவதும் காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னையில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

மும்பையில் முதல் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கேஎல் ராகுலும், ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிபெற உதவினர். அடுத்து  விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையும் படிக்க : ஜியோ சினிமாவின் டாடா ஐபிஎல் 2023 - பேட்டிங் களமிறங்கிய தோனி - சூர்யகுமார் யாதவ் ஜோடி!

வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் மைதான நுழைவாயிலில் அதிகாலை முதலே காத்துக்கிடந்தனர். அதற்கான படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Chepauk, Ind Vs Aus, India vs Australia