முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs AUS 3rd ODI : 21 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி… தொடரை இழந்து இந்திய அணி…

IND vs AUS 3rd ODI : 21 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி… தொடரை இழந்து இந்திய அணி…

இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

இந்திய அணி தொடரை இழந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 270 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது. எனினும் 248 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 33 ரன்னும், மிட்செல் மார்ஷ் 47 ரன்னும் எடுத்தனர். வார்னர் 23, லபுஸ்சேன் 28, அலெக்ஸ் கேரி 38 ரன்க எடுத்தனர்.மற்ற வீரர்கள் கணிசமாக ரன்களை சேர்க்க ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.

top videos

    இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர். இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 30 ரன்களும், சுப்மன் கில் 37 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். விராட் கோலி 54 ரன்களும், கே.எல். ராகுல் 32 ரன்களும் சேர்க்க, இந்திய அணி 151 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதன்பின்னர் ரன்குவிப்பு வேகம் குறையத் தொடங்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை விழ ஆரம்பித்தன. கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 40ரன்களும், ஜடேஜா 18 ரன்களும், ஷமி 14 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ளது.

    First published:

    Tags: Cricket