முகப்பு /செய்தி /விளையாட்டு / அசுர பலத்துடன் களமிறங்கும் சென்னை அணியில் இருக்கும் ஒரே பிரச்னை இதுதான்!

அசுர பலத்துடன் களமிறங்கும் சென்னை அணியில் இருக்கும் ஒரே பிரச்னை இதுதான்!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

Chennai Super Kings | 16வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசுர பலத்துடன் களமிறங்கும் தோனி படையில் உள்ள பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை பார்ப்போம்.

  • Last Updated :
  • Chennai, India

16-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மார்ச் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது. ஐபிஎல் வெற்றிகரமான கேப்டன் எனும் பேர் பெற்ற எம்.எஸ்.தோனி இதுவரை 2010, 2011, 2018, 2021 என 4 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னைதான். அதேசமயம், கடந்த ஆண்டு சி.எஸ்.கேவுக்கு சற்று கடினமான ஆண்டாக அமைந்தது. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது, ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே தொடர்ந்து சறுக்கியது என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி.

இந்த சீசனில் சிஎஸ்கே தோனி தலைமையில் முழு பலத்துடன் களமிறங்குகிறது. தொடக்க பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே அசத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை தொடர்ந்து பெரும் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள பென் ஸ்டோக்ஸ் பலம் சேர்க்கக்கூடும். அவருக்கு 4-வது இடத்தில் களமிறங்கும் அம்பதி ராயுடு உறுதுணையாக இருக்கக்கூடும். நடுவரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா வலுவாக உள்ளனர். 41 வயதான தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்பதால் 5-வது முறை மகுடம் சூடுவதில் தீவிரம் காட்டுவார் என எதிர்பாக்கப்படுகிறது.

பந்து வீச்சில் தீபக் சாஹர் அணிக்கு திரும்பி இருப்பது வலு சேர்த்துள்ளது. தொடக்க ஓவர்களில் அவரது ஸ்விங் பந்து வீச்சு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மகேஷ் தீக்ஷனா, சிசன்டா மகலா, முகேஷ் சவுத்ரி, மிட்செல் சாண்ட்னர் உள்ளிட்டோரும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சிஎஸ்கே அணியின் டாப் 7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடது கை வீரர்களாக உள்ளனர். இது எதிரணியின் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் பாதி போட்டியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேன்களாக மட்டுமே களமிறங்குவதால் வேகப்பந்து வீச்சில் சற்று தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த முறையெல்லாம் பிராவோ டெத் ஓவர்களில் அட்டகாசமாக பந்துவீசி அசத்தி இருந்தனர்.

சிஎஸ்கே அணி 2019-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மைதானமான சேப்பாக்கத்துக்கு முழுமையாக திரும்புகிறது. ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தவாறு மாய சுழல், ஆஃப் ஸ்பின், லெக் ஸ்பின், இடது கை விரல் ஸ்பின் என சுழற்பந்து வீச்சில் உள்ள அனைத்து வகைகளையும் கையாளக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது. இதனால் இந்த சீசனில் அசுர பலத்துடன் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. மேலும் கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசன் என்பதால் ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் உள்ளனர்.

சென்னை அணி வீரர்கள் விவரம்:

top videos

    தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.

    First published:

    Tags: CSK, IPL 2023