முகப்பு /செய்தி /விளையாட்டு / கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு… ரஹானே, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் நீக்கம்…

கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியல் வெளியீடு… ரஹானே, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் நீக்கம்…

பிசிசிஐ

பிசிசிஐ

ஷிகர் தவான் கடந்த சில மாதங்களாக விளையாடாத நிலையில் சி பிரிவில் நீடித்து வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐயின் புதிய ஒப்பந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மூத்த வீரர்களான அஜிங்யா ரஹானே, இஷாந்த் சர்மா உள்ளிட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் பெயர் ஏ+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்த பட்டியலில் அதிக சம்பளம் பெறும் வீரர்கள் இந்த பிரிவில் இடம்பெறுவார்கள். இவர்கள் அதிக மதிப்பு மிக்க வீரர்களாகவும் கருதப்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் தான் இடம்பெற்றிருந்த ஏ பிரிவில் இருந்து நீக்கப்பட்டு பி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

புவனேஸ்வர் குமார், அஜிங்யா ரஹானே, இஷாந்த் சர்மா, ரிதிமான் சாஹா, தீபக் சஹார், ஹனுமா விஹாரி உள்ளிட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்கள். புவனேஸ்வர் குமார் கடந்த ஆண்டில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளுககாக மட்டுமே பயன்படுத்தப்படும் ஹனுமா விஹாரியும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா, கே.எஸ்.பரத், அர்ஷ்ப் தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் தற்போது சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவான் கடந்த சில மாதங்களாக விளையாடாத நிலையில் சி பிரிவில் நீடித்து வருகிறார்.

2022 – 23 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந் பட்டியல்….

பிரிவு A+: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

பிரிவு ஏ: ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல்

பிரிவு பி: சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்

top videos

    பிரிவு  சி: உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத்

    First published:

    Tags: BCCI