முகப்பு /செய்தி /விளையாட்டு / கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பரிசு தொகையை அதிரடியாக உயர்த்திய பிசிசிஐ...

கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. பரிசு தொகையை அதிரடியாக உயர்த்திய பிசிசிஐ...

மாதிரி படம்

மாதிரி படம்

Bcci Prize List | சீனியர் பெண்கள் ஒரு நாள் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை 6 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அதிரடியாக அதிகரித்துள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரானி கோப்பை தொடரை வெல்பவர்களுக்கு பரிசுத்தொகை 25 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  வான்கடேவில் குவிந்த 19,000 சிறுமிகள்.. "கனவுகள் மெய்ப்பட வேண்டும்..!” - நீடா அம்பானி மகிழ்ச்சி

சீனியர் பெண்கள் ஒரு நாள் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை 6 லட்சத்தில் இருந்து 50 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பட்டியல்களில் முதலிடம் மட்டுமல்லாது அடுத்தடுத்த இடங்களுக்கும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் சில உள்ளூர் போட்டிகளுக்கும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: BCCI